மதுரையில் உள்ள தல்லாக்குளம் பகுதியில் பெண் காவல் துறை அதிகாரியாக பணிபுரிபவர் எஸ்.சந்தானலட்சுமி.இவரது சொந்த ஊர் மதுரை விளாங்குடியில் உள்ள சொக்கநாதபுரம். கடந்த 2007 -ம் ஆண்டு இவருக்கும் சீனிவாச பெருமாள் என்பவருக்கும் இடையே திருமணம் நடைபெற்றுள்ளது.
தற்போது 29 வயதான இவருக்கு ஒரு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளது.இந்நிலையில் கணவருக்கும் இவருக்கும் இடையே கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து கேட்டு மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்நிலையில் பிரிந்து வாழும் கணவருடன் சேர்த்து வைப்பதாக கூறி இவருக்கு சாதி சங்க தலைவரான பூமிநாதன் மற்றும் தல்லாக்குளம் முன்னாள் கவுன்சிலர் ஆறுமுகம் என்ற இருவர் அறிமுகமாகியுள்ளன.
மேலும் ஜூலை 6-ம் தேதி மதியம் 12 மணியளவில் பூமிநாதன்,கணவருக்கு வசிய மருந்து வைத்து சேர்த்து வைப்பதாக சாமியார் என்ற ஒருவரை அறிமுப்படுத்தியுள்ளார்.அதற்காக கணவரின் சட்டை மற்றும் 50,00 பணம் கொண்டுவருமாறு கூறியுள்ளார்.
அவர்கள் கூறியமாதிரி பணத்தை ஏற்பாடு செய்து விட்டு அவர்கள் கூறிய இடத்திற்கு சென்றுள்ளார்.அப்போது பூஜைக்கு பொருட்கள் வாங்க வேண்டும் என்று கூறி கீழமாசி வீதிக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு சாமியாருக்கு அருள்வர கேரளாவிற்கு இன்று செல்லவேண்டாம் என கூறியுள்ளார்.அதனால் மீண்டும் அவர்கள் இருந்த விடுதிக்கு சென்றுள்ளனர்.மேலும் காந்தி மியூஸியம் அருகில் வந்த போது ஏதோ தடங்கலாக உள்ளது என்று கூறி சாமியார் சந்தானலட்சுமியின் மீது ஒரு மையை தடவியுள்ளார்.
அப்போது சந்தானலட்சுமி மயக்கம் ஏற்பட்டு மயங்கியுள்ளார்.பின்னர் 10.30 மணியளவில் அவருக்கு சுயநினைவு திரும்பியுள்ளது.அப்போது அவர் எழுந்து பார்க்கும் போது தனது ஆடை கலைந்திருந்த நிலையில் தனக்கு பாலியல் துன்புறுத்தல் நடந்திருப்பதை உணர்ந்துள்ளார்.
இதன் பின்னர் வீட்டிற்கு வந்த போது போமிநாதனின் தந்தை என கூறி பேசிய நபர்,அங்கு நடந்ததை வெளியே கூறினால் வாழ்க்கையை சீரழித்து விடுவதாக மிரட்டியுள்ளார்.இதன் காரணமாக மதுரை காவல்துறை அதிகாரியிடம் புகார் அளித்துள்ளார்.
இதனை அடுத்து சந்தானலட்சுமி மருத்துவ பரிசோதனைக்காக மதுரையில் உள்ள அரசு ராஜாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்
பின்னர் புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் சாமியார் உட்பட 4 நபர்களை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றன.
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…
குஜராத் : ஜாம்நகர் மாவட்டத்தில் உள்ள ஆனந்த் அம்பானியின் விலங்கு மீட்பு, பாதுகாப்பு மற்றும் மறுவாழ்வு மையமான வந்தாராவை இன்று…