வீட்டிற்குள் ரத்தவெள்ளத்தில் கிடந்த பெண்மணி!அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர்!
கோயம்புத்தூர் மாவட்டம் மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவர் பர்வீன் பானு.இவர் தனது கணவரிடம் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளார்.இவர் டெய்லர் வேலைக்கு சேர இருந்ததால் தன் குழந்தை இருவரையும் தந்து தாயார் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
திருப்பூர் ஈஸ்வரன் கோவில் அருகே பள்ளி வாசல் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.இந்நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று வெகு நேரம் ஆகியும் வீட்டை விட்டு வெளியே வராததால் அக்கம்பக்கத்தினர் அவரின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு ரத்தவெள்ளத்தில் கிடந்த பானுவை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர்.உடனே காவல் துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் பானுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
அதில் பானுவின் அடிவயிற்றின் பின்புறம் கத்தியால் குத்தியுள்ளது தெரியவந்துள்ளது.இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.