முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி காயமடைந்த பெண் உயிரிழப்பு!
சேலம் அருகே முதல்வரின் பாதுகாப்பு வாகனம் மோதி காயமடைந்த பெண் உயிரிழந்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூர் வழியாக சென்னை சென்று கொண்டிருந்த முதல்வர் அவர்களின் பாதுகாப்பு வாகனம் கடந்த 18 ஆம் தேதி அவ்வழியே சென்று கொண்டிருந்த சௌந்தரம் என்னும் 64 வயது பெண் மீது மோதியுள்ளது. இதனால் அந்தப் பெண் படுகாயம் அடைந்துள்ளார். காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று இந்த பெண் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.