வண்டி சக்கரத்தில் சேலை மாட்டியதால், தலையில் அடிபட்டு பெண் உயிரிழப்பு!
வண்டி சக்கரத்தில் சேலை மாட்டியதால், தலையில் அடிபட்டு பெண் உயிரிழந்துள்ளார்.
கடலூர் மாவட்டத்திலுள்ள திட்டக்குடி பகுதியில் ஆதனூரிலுள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பெரியசாமி என்பவரும் அவரது மனைவி சுகந்தி என்பவரும் ஆயுத பூஜைக்காக வீட்டுக்கு தேவையான பொருட்கள் வாங்க ஆதனூரில் இருந்து திட்டக்குடிக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளனர்.
பொருட்களை வாங்கிக்கொண்டு மீண்டும் சொந்த ஊருக்கு கிளம்பும் பொழுது இரு சக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்திருந்த சுகந்தியின் புடவை அவரை அறியாமல் சக்கரத்தில் சிக்கி உள்ளது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த சுகந்திக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்தம் கசிந்ததால், உடனடியாக அவரை மீட்டு திட்டக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்துள்ளனர். ஆனால் சுகந்தி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.