பிறந்து 25 நாளே ஆன பெண் குழந்தை கொரோனாவால் உயிரிழப்பு.!
தமிழகத்தில் புதிதாக 4,231 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3,994 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினனார்கள்.
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 65 பேர் உயிரிழந்துள்ளதால், உயிரிழந்தோரின் எண்ணிக்கை 1,765 ஆக அதிகரித்துள்ளது. இதில் தனியார் மருத்துவமனையில் 22 பேரும், அரசு மருத்துவமனையில் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் திருவண்ணாமலையைச் சேர்ந்த 25 நாளே ஆன பெண் குழந்தை சுகாதார மற்றும் மருத்துவமனையில் 27.06.2020 அன்று 3 முறை அறுவை சிகிச்சை செய்யப்பட்டு சிகிச்சை பெற்று வந்தது தெரியவந்துள்ளது. இந்த குழந்தைக்கு சென்னை எக்மோரில் கொரோனா சோதனை முடிவில் கொரோனா இருப்பது உருதியானது . இந்நிலையில் மேலும் இந்த குழந்தைக்கு செப்டிசீமியா, ஹிர்ஷ்ஸ்ப்ரங் பல லாபரோடோமிகள் நோய்கள் காரணமாக அந்த குழந்தை 07.07.2020 அன்று மாலை 02.30 மணிக்கு இறந்தார்