அழகிகளை வைத்து சொகுசு பங்களாவில் விபச்சாரம் நடத்திய பெண் புரோக்கர்!கண்ணிவைத்து பிடித்த காவலர்கள்!

Published by
Sulai
  • சொகுசு பங்களாவில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்திய பெண் புரோக்கரை காவல்துறையினர் கண்ணிவைத்து பிடித்துள்ளனர்.
  • உல்லாசமாக இருந்த இரண்டு நபர்களோடு பெண் புரோக்கரையும் கைது காவல்துறையினர் செய்துள்ளனர்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவில் பகுதியில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி சாலை சந்திப்பு பகுதியில் ஒரு சொகுசு பங்களா உள்ளது.அதில் அழகிகளை வைத்து விபச்சாரம் நடப்பதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.

அந்த பங்களாவில் பகல் மற்றும் இரவு நேரங்களில் அடிக்கடி ஆண்கள் வந்து சென்றுள்ளனர்.இவ்வாறு அடிக்கடி ஆண்கள் வந்து செல்வதால் அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து காவல்துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

இதனால் காவல்துறையினர் அந்த பங்களாவை ரகசியமாக கண்காணித்து வந்துள்ளனர்.இந்த நிலையில் கடந்த ஞாயிற்று கிழமை அன்று காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் இருந்த போது சில வாலிபர்கள் அந்த பங்களாவிற்கு சென்றுள்ளனர்.

இதன் காரணமாக அதிரடியாக பங்களாவிற்குள் நுழைந்த காவல்துறையினர் சோதனை நடத்தியுள்ளனர்.அப்போது அந்த பங்களாவில் 3 அறைகள் இருந்துள்ளது அதில் 3 இளம் அழகிகள் இருந்துள்ளனர்.

அவர்களிடம் விசாரணை நடத்திய காவல்துறையினருக்கு அழகிகளை வைத்து விபச்சாரம் நடத்தியது தெரியவந்துள்ளது.அந்த அழகிகள் பெண் புரோக்கர் ஒருவர் விபச்சாரத்தில் ஈடுபடுத்தி வந்துள்ளார்.

இந்நிலையில் பெண்களுடன் உல்லாசமாக இருந்த இரண்டு நபரையும் அந்த பெண் புரோக்கரையும் கைது செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றன. பின்னர் அங்கிருந்த அழகிகளை மீட்டு அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைத்துள்ளனர்.

மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.

Recent Posts

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

நாளை பரந்தூர் பயணம்.. தவெக தொண்டர்களுக்கு விஜய் ரகசிய உத்தரவு?

காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…

26 minutes ago

“போர் நிறுத்தம் கிடையாது!” ஹமாஸுக்கு பதிலடி கொடுக்கப்படும்.! இஸ்ரேல் திட்டவட்டம்!

டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…

52 minutes ago

‘இனி நான் திமுக கட்சி உறுப்பினர்’ சத்யராஜ் மகள் திடீர் முடிவு!

சென்னை : திரைப்பட நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா, திமுகவுக்கு ஆதரவாக அவ்வப்போது பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். அவரைப்…

2 hours ago

சட்டுனு “பத்திக்கிச்சு” பட்டய கிளப்பும் விடாமுயற்சி 2வது பாடல் இதோ…

சென்னை : அஜித் குமார் நடிப்பில் மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் விடாமுயற்சி. இப்படம் வருகிற பிப்ரவரி மாதம் 6ஆம்…

2 hours ago

ஈரோடு கிழக்கு : “வாக்கு சேகரிப்பதை விட ‘இது’ தான் முக்கியம்” முதலமைச்சர் போட்ட உத்தரவு!

ஈரோடு : வரும் பிப்ரவரி 5ஆம் தேதியன்று ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.  இந்த இடைத்தேர்தலில் திமுக…

3 hours ago

Live : இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…

சென்னை : மயிலாடுதுறையில் தரங்கம்பாடி , பொன்னேரி, செங்குன்றம் ஆகிய பகுதிகளிலும், சென்னையில் மீனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளிலும் நேற்று முதல்…

3 hours ago