பொதுவாக இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகளவில் பல இடங்களில் லஞ்சம் என்பது இன்னும் நடைமுறையில் இருந்து கொண்டே உள்ளது. அதுபோல தற்போது இந்தியாவில் உள்ள கரூர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது. கரூர் மாவட்டத்தின் வட்டார வளர்ச்சி அலுவலர் தான் ஜெயராணி.
கரூரை சேர்ந்த ரமேஷ் என்பவர் வீடு கட்டுவதற்கு முடிவு செய்ததால். தனது வீட்டு மனையை பிரிப்பதற்காக ஜெயந்தி உதவியை நாடியுள்ளார். இந்நிலையில், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகிய ஜெயந்தி இது சம்பந்தமான மனுவை பெற்றுக்கொண்டு, அவருக்கு எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் பல முறை அலைய விட்டுள்ளார்.
குறிப்பிட்ட நாட்களுக்கு பிறகு பொறுமையிழந்த ரமேஷ், நேரடியாக ஜெயந்தியிடம் லஞ்சம் எதுவும் எதிர்பார்க்கிறீர்களா என்று கேட்டுள்ளார். அப்போது ஜெயந்தி வீட்டுமனைகளில் பிரச்சனை இருப்பதால் 34 ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதும் அந்த நிமிடமே உங்களது வேலை முடிந்துவிடும் என்று கூறியுள்ளார். 34,000 என்பது சாதாரண தொகை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.
எனவே ரமேஷுக்கும் அந்த பணத்தை அவரிடம் கொடுக்க மனமில்லை. எனவே இலஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளின் உதவியுடன் பணத்தை கொடுக்க மாறுவேடத்தில் இருந்த அதிகாரிகளுடன் ஜெயந்திரனியிடம் சென்றுள்ளனர். அப்போது லஞ்சம் வாங்கிய ஜெயந்தி கையும் களவுமாக பிடிபட்டது மட்டுமல்லாமல், நீதிபதியிடம் ஆஜர்படுத்த அழைத்துச் செல்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர்.
ஒரு கட்டத்தில் சார் சர் தெரியாமல் பண்ணி விட்டேன், மன்னித்து விடுங்கள் என்று ஜெயந்தி கெஞ்சியுள்ளார். ஆனால் அது ஏற்றுக்கொள்ள படவில்லை. சற்றும் எதிர்பாராமல் நடந்த இந்த சம்பவத்தால் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு கீழே விழுந்துள்ளார். அதன்பின் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும்போதே ஜெயந்தி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். லஞ்சம் வாங்கியதால் உயிரிழந்த பெண் அதிகாரியின் மரணம் கரூர் பொது மக்களிடையே மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி : இந்தியா vs பாகிஸ்தான் இரண்டு நாட்டிற்கும் இடையே நடைபெற்ற போர் என்பது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்…
டெல்லி : இந்தியா-பாகிஸ்தான் எல்லையில், குறிப்பாக ஜம்மு-காஷ்மீர் பகுதியில், கடந்த சில ஆண்டுகளாகவே பதற்றம் நீடித்து வருகிறது. இந்தப் பதற்றம்,…
டெல்லி : ஜம்மு- காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்தில் பாகிஸ்தான் ஷெல் தாக்குதலால் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா திங்கள்கிழமை…
மகாராஷ்டிரா : சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி அறிவித்துள்ளார். கோலியின் இந்த திடீர் ஓய்வு…
டெல்லி : இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமான பிசிசிஐ (BCCI), நடப்பு இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) 2025 சீசனை…
ஊட்டி : நீலகிரி மாவட்டத்தின் உதகையில் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் புகழ்பெற்ற மலர் கண்காட்சி மே 15, 2025 அன்று…