திருட சென்ற இடத்தில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த திருடன் கைது செய்யப்பட்டுள்ளான்.
கிருஷ்ணா பகதூர் என்பவர் சென்னை திருமங்கலம் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலராக பணிபுரிந்து வருகிறார் .கிருஷ்ணாவும் அவரது மனைவியும் அதே அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி வேலை பார்த்து வந்துள்ளனர்.
நேற்று இரவு கிருஷ்ணா வழக்கம்போல் பணிக்கு சென்று குடியிருப்பின் வாசலில் தூங்கியுள்ளார்.கிருஷ்ணாவின் மனைவி குடியிருப்பின் மேல் பகுதியில் லிப்ட் அறையில் தூங்கியுள்ளார்.இதற்குஇடையில் அதிகாலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கிருஷ்ணாவின் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். அந்த மர்ம நபரிடம் இருந்த தப்பிக்க கிருஷ்ணாவின் மனைவி கூச்சலிட மர்ம நபர் தப்பியோடிவிட்டார்.எனவே இந்த சம்பவம் குறித்து கிருஷ்ணா , திருமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்த்துறையினர் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தனர்.
காட்சிகளை ஆய்வு செய்ததின் அடிப்படையில் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தது அமைந்தகரை பகுதியை சேர்ந்த ராமகிருஷ்ணன் என்பது தெரிந்ததை தொடர்ந்து அந்த நபரை காவல்த்துறையினர் கைது செய்தனர்.காவல்த்துறை நடத்தி விசாரணையில் அந்த நபர் திருடுவதை வழக்கமாக கொண்டுள்ளார் என்றும் அவர் மீது ஏற்கனவே கொள்ளை வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரிய வந்தது. மேலும் திருட சென்ற இடத்தில் கிருஷ்ணாவின் மனைவியை பாலியல் வன்கொடுமை செய்ததையும் ஒப்புக்கொண்டார் ராமகிருஷ்ணன்.பாதிக்கப்பட்ட பெண் கீழ்பாக்கம் மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நியூ யார்க் : மெட்டா நிறுவனத்தின் தலைமை அதிகாரி மார்க் ஸுக்கர்பர்க் அண்மையில், தி ஜோ ரோகன் எக்ஸ்பீரியன்ஸ் போட்காஸ்ட்…
புனே : இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த பிறகு இந்திய ராணுவத்தை அதிகாரபூர்வமாக அங்கீகரித்து முதன் முறையாக இந்தியாவுக்கு என அதிகாரபூர்வ…
"கரும்பு தின்ன கூலியா' என்ற பழமொழிக்கு ஏற்ப கரும்பு சாப்பிடுவதால் பற்கள் முதல் ஜீரண மண்டலம் வரை பல நன்மைகளை…
சென்னை : வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வாடிவாசல் எனும் திரைப்படம் தயாராக உள்ளது என அறிவித்து ஆண்டுகள் கடந்து…
சென்னை : z024ஆம் ஆண்டு பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிய 10 நபர்களுக்கு விருதுகளையும், பரிசுத்தொகையையும் முதலமைச்சார் மு.க.ஸ்டாலின் இன்று…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் பிரமாண்ட மஹா…