இதனை செய்யாமல் தற்கொலைகளை தடுக்க முடியாது.! அன்புமணி ராமதாஸ் கண்டனம்.!
ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்காமல், அதனால் நிகழும் அப்பாவிகளின் தற்கொலைகளையும் தடுக்க முடியாது. – பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.
ஆன்லைன் சூதாட்டத்தால் பணத்தை இழந்து கடன் தொல்லையால் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டவர்கள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது. இது குறித்து பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது கண்டனத்தை டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அன்புமணி வருத்தம் :
அதில், திருச்சி மாவட்டம் மணப்பாறை, அஞ்சல்காரன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி வில்சன் என்பவர் ஆன்லைன் சூதாட்டத்தில் 4 லட்சத்தை இழந்து, தற்கொலை செய்து கொண்டுள்ளார் அவரது குடும்பத்திற்கு தனது வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன். என பதிவிட்டுள்ளார் .
தொடர் தற்கொலைகள் :
மேலும் , இதே போல போல திருச்சி திருவெரும்பூரில் ஆன்லைன் சூதாட்டத்தால் ரவிச்சந்திரன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சோகம் மறையும் முன்பே அடுத்த தற்கொலை நிகழ்ந்துள்ளது என குறிப்பிட்டார்.
அன்புமணி ராமதாஸ் கண்டனம் :
அடுத்தாக, ஆன்லைன் சூதாட்டத்தை தடுக்காமல், அதனால் நிகழும் அப்பாவிகளின் தற்கொலைகளையும் தடுக்க முடியாது. என பதிவிட்டு, ஆளுனரால் திருப்பி அனுப்பப்பட்ட ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் மீண்டும் சட்டபேரவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் அளிப்பதை தவிர வேறு வாய்ப்பில்லை. அரசியல் சட்டப்படியான அந்தக் கடமையை ஆளுனர் உடனடியாக செய்ய வேண்டும் எனவும் தனது டிவிட்டர் பக்கம் வாயிலாக தனது கண்டனத்தையும், கோரிக்கையும் முன் வைத்தார் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ்.