பெருமை பேசாமல், மீனவர்களை காப்பாற்றுமாறு பிரதமரிடம் அவர் வலியுறுத்த வேண்டும் என ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ ட்வீட்.
நாகப்பட்டினம் அக்கரைப்பேட்டை மற்றும் கீச்சாங்குப்பம் பகுதிகளை சார்ந்த மீனவர்கள் 10 பேர், கடந்த 28-ம் தேதி அன்று கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனர். நிலையில், இந்திய கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் மீது, இலங்கை கடற்படை அத்துமீறி கொடூரமாக துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் அனைவரும் படகில் படுத்து தங்களை தற்காத்துக் கொள்ள முயன்றுள்ளனர். அதில் கலைச்செல்வன் என்ற மீனவரின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயமடைந்துள்ளார். தற்போது நாகப்பட்டினம் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், இதுகுறித்து ஆளூர் ஷா நவாஸ் எம்.எல்.ஏ தனது ட்வீட்டர் பக்கத்தில், “மோடி ஆட்சியில் ஒரேயொரு மீனவர் மீது கூட இலங்கை கடற்படையால் துப்பாக்கிச்சூடு நடத்தப்படவில்லை” என்று அண்ணாமலை பேசினார். தற்போது நடைபெற்றிருக்கும் துப்பாக்கிச்சூட்டிற்கு அவர் என்ன பதில் சொல்வார்? எனவே, பெருமை பேசாமல், மீனவர்களை காப்பாற்றுமாறு பிரதமரிடம் அவர் வலியுறுத்த வேண்டும்.
மேலும், நமது மீனவர்கள் மீது தொடர்ச்சியாக தாக்குதல் நடத்திவரும் இலங்கை கடற்படை மீது உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மீனவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட வேண்டும்.” என பதிவிட்டுள்ளார்.
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…
காசா : அக்டோபர் 2023-ல் தொடங்கிய இஸ்ரேல் - ஹமாஸ் போரால் கடந்த 15 மாதங்களுக்கு மேலாக காசா நகர்…