மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், முதல்வர் யாரிடம் கேட்க மாவட்டங்களுக்கு போகிறார்? – ஸ்டாலின்

Published by
பாலா கலியமூர்த்தி

மக்களின் பாதிப்புகளை மக்கள் பிரதிநிதிகளிடம் கேட்காமல், முதலமைச்சர் யாரிடம் கேட்க மாவட்டங்களுக்கு போகிறார்? – ஸ்டாலின்

இதுகுறித்து திமுக தலைவர் ஸ்டாலின் அவரது ட்விட்டர் பக்கத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், கூவத்தூரில் லாட்டரி அடித்தது போல முதல்வரான திரு.பழனிசாமி அவர்களுக்கு மக்களின் அருமை விளங்கவில்லை. அரசு விழா & ஆய்வுக்கூட்டங்களுக்கு திமுக MP & MLA -களை அழைத்து, மக்களின் குறைகளுக்கு தீர்வுகாண வேண்டும் என்றும் அரசு விழாக்களிலும், ஆய்வுக்கூட்டங்களிலும், பிரதான எதிர்க்கட்சியாக விளங்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களை வேண்டுமென்றே தொடர்ந்து புறக்கணித்து வரும் அ.தி.மு.க. அரசுக்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் தர்மபுரியில் நடைபெற்ற கொரோனா குறித்த ஆய்வுக் கூட்டத்தில், கழகத்தின் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினர் செந்தில்குமார் அவர்களை அனுமதிக்க மறுத்ததோடு மட்டுமின்றி, நான் நடத்தும் ஆய்வுக் கூட்டங்களில் எம்.பி.,யை எப்படி அனுமதிக்க முடியும் என்று முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியிருப்பது, ஜனநாயக விரோதம் மட்டுமல்லாமல், பண்பாடற்ற செயல், அநாகரிகத்தின் உச்சம் என்றுதான் பார்வையாளர்கள் கருதுகிறார்கள். மேலும், அரசு ஆய்வு கூட்டங்களுக்கு திமுக எம்.பி., எம்.எல்.ஏ.,க்களை அழைக்க வேண்டும் என்றும் மக்களின் குறைகளை எடுத்துரைத்து தீர்வுகாண வழிவகை ஏற்படுத்த வேண்டும் எனவும் கூறியுள்ளார்.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

தோனி இருக்கும் வரை சென்னை ஆதிக்கம் தான்! லக்னோ பயிற்சியாளர் ஜாகீர் கான் பேச்சு!

சென்னை : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே கிரிக்கெட் ரசிகர்களை கையில் பிடிக்க முடியாது என்று சொல்லலாம். அந்த அளவுக்கு தங்களுக்கு…

34 minutes ago

“மறு ஆய்வு செய்யணும்”…இரட்டை இலை விவகாரத்தில் அ.தி.மு.க அதிரடி மனு..!

சென்னை : அதிமுக உட்கட்சி விவகாரம் அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாக வெடித்துள்ளது.  எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மற்றும் ஓ.பன்னீர் செல்வம் தரப்பு…

2 hours ago

“மாஸ் மட்டுமில்லை…அதுவும் இருக்கு” குட் பேட் அக்லி குறித்து உண்மையை உடைத்த ஆதிக்!

சென்னை :  அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படம் வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.…

2 hours ago

நாங்க போலீஸ் பேசுறோம்..82 வயது மூதாட்டியிடம் ரூ.20 கோடியை சுருட்டிய கும்பல்…3 பேர் அதிரடி கைது!

மும்பை : இன்றயை காலத்தில் டிஜிட்டல் வழியாக மர்ம நபர்கள் வயதானவர்களை குறி வைத்து அவர்களிடம் பணம் மோசடி செய்து…

3 hours ago

டி-ஷர்ட் அணிய தடையா? இதுதான் அவர்கள் கொடுக்கும் மரியாதை! கனிமொழி பேட்டி!

டெல்லி : தொகுதி மறுவரையறை பற்றி விவாதம் நடத்த வேண்டும் என நாடாளுமன்றத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி…

4 hours ago

தமிழ்நாட்டில் கொலை குற்றம் 6.8% குறைந்துள்ளது! முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தகவல்!

சென்னை : தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி…

4 hours ago