தமிழ்நாட்டில் போக்குவரத்துக்கு தொழிற்சங்கத்தினர் அறிவித்த வேலைநிறுத்த போராட்டத்துக்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனு தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று காலை தலைமை நீதிபதி அமர்வில் நடைபெற்றது. அப்போது தலைமை நீதிபதி அமர்வு கூறியதாவது, வேலைநிறுத்ததால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான்.
போராட்டம் நடத்த உரிமை உள்ளது, ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. அரசும், போக்குவரத்துக்கு தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவதாக இருக்கிறீர்கள் என கேள்விகள் எழுப்பினர். இதன்பின், ஓய்வூதியர்களுக்கு மட்டும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி வழங்குவது குறித்து முடிவு எடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு, இந்த வழக்கை இன்று பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டது.
அதன்படி, மீண்டும் இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது, ஜனவரி 19-ம் தேதி வரை வேலைநிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க போக்குவரத்து தொழிற்சங்கங்கள் சம்மதம் தெரிவித்தனர். உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தலை ஏற்று, போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெறுவதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்தனர். நாளை முதல் பணிக்கு திரும்புவதாகவும் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் உறுதி அளித்துள்ளது.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!
இதன்மூலம் தமிழ்நாடு முழுவதும் 2 நாட்களாக நடைபெற்று வந்த பஸ் தொழிலாளர்களின் வேலைநிறுத்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வருகிறது. இந்த நிலையில் செய்தியாளர் சந்திப்பில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியதாவது, போக்குவரத்து தொழிற்சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை திரும்ப பெற்றுள்ளது வரவேற்கத்தக்கது. முதலமைச்சருடன் ஆலோசிக்கப்பட்டு, அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜனவரி 19ம் தேதி மீண்டும் தொழிற்சங்கங்களுடன் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெறும். கருணை அடிப்படையில் 800க்கும் மேற்பட்டோருக்கு போக்குவரத்து கழகங்களில் பணி வழங்கப்பட்டுள்ளது. தொழிற்சங்கங்களின் மற்றொரு கோரிக்கையான புதிதாக ஓட்டுநர், நடத்துநர்களை பணிக்கு எடுக்க வேண்டும் என்பதும் ஏற்கப்பட்டுள்ளது.
ஓட்டுநர், நடத்துநர்களுக்கான எழுத்து தேர்வு முடிந்து தற்போது நேர்முக தேர்வு நடைபெற்று வருகிறது. பிப்ரவரி மாதம் வரை நேர்முக தேர்வு நடைபெறும், அதன்பிறகு புதிதாக ஓட்டுநர், நடத்துநர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அமைச்சர், தொழிற்சங்கங்கள் முன்வைத்த 2 கோரிக்கைகள் ஏற்கப்பட்டுள்ளது, மேலும் 2 கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக கூறியுள்ளோம். அரசின் நிதி நிலையை பொறுத்து எஞ்சிய 2 கோரிக்கைகளை முதலமைச்சர் நிறைவேற்றுவார் என கூறியுள்ளோம் எனவும் குறிப்பிட்டார்.
சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்களை நியமிப்பது, மத்திய அரசு கொண்டு வந்த பல்கலைகழக நிதிநல்கைக் குழு தொடர்பான வரைவு நெறிமுறைகளை திரும்ப பெற…
டெல்லி : இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டிகளில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியின் புதிய கேப்டனாக இந்திய அணியின் விக்கெட்…
சென்னை : பரந்தூர் விமான நிலையத்திற்கு எதிராக 910 நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. இந்நிலையில், தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவருமான விஜய்…
கொல்கத்தா : ஆர்.ஜி.கர் என்கிற அரசு மருத்துவக் கல்லுாரி மற்றும் மருத்துவமனையில் முதுநிலை இரண்டாம் ஆண்டு படித்து வந்த மாணவி ஒருவர் …
காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழக கட்சி தலைவர் விஜய் இன்று மேல்பொடவூரில் தனியார் மண்டப வளாகத்தில் பரந்தூர் விமான…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…