நேற்று கூட்டணியில் இருந்து விலகல்..! இன்று தேமுதிகவிற்கு சின்னம் ஒதுக்கீடு..!
தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளது.
தமிழகம், புதுச்சேரிக்கு அடுத்த மாதம் 6-ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறயுள்ளது. ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, அரசியல் கட்சிகளுக்கு சின்னம் ஒதுக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதனை, தேமுதிக சார்பில் இந்திய தலைமை தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் ஓன்று எழுதப்பட்டது. அதில், தேமுதிக சார்பில் போட்டியிடம் வேட்பாளர்களுக்கு முரசு சின்னத்தை ஒதுக்குமாறு கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், தேமுதிகவின் கோரிக்கையை ஏற்று தமிழகம் மற்றும் புதுச்சேரியில் போட்டியிட தேமுதிகவுக்கு முரசு சின்னத்தை ஒதுக்கி இந்திய தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
நேற்று அதிமுகவில் இருந்து விலகிய தேமுதிக தனித்து போட்டியிடலாமா..? அல்லது கூட்டணி அமைத்து போட்டியிடலாமா..? என்று ஆலோசனை நடத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.