#ELECTIONBREAKING : அதிமுகவில் இருந்து விலகல்.. திமுகவிற்கு ஆதரவு.,இந்திய தேசிய லீக் அறிவிப்பு ..!
அதிமுக கூட்டணியில் இருந்து இந்திய தேசிய லீக் விலகுவதாக அறிவித்துள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் மாதம் 6-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. வேட்புமனு தாக்கல் செய்ய இன்னும் 3 நாள்கள் மட்டுமே உள்ளதால் கூட்டணி மற்றும் தொகுதி பங்கீடு ஆகியவற்றில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து இந்திய தேசிய லீக் விலகுவதாக அறிவித்துள்ளது. மேலும், வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு என இந்திய தேசிய லீக் கட்சி தெரிவித்துள்ளது. அதிமுக கூட்டணியில் இருந்து இன்று தேமுதிக விலகியது.
ஏற்கனவே அதிமுக கூட்டணியில் இருந்து முக்குலத்தோர் புலிப்படை கட்சி, அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி விலகியது என்பது குறிப்பிடத்தக்கது.