“டங்ஸ்டன் சுரங்கம் அனுமதியை திரும்ப பெறுக”…எம்பி கனிமொழி வலியுறுத்தல்!
டங்ஸ்டன் விவகாரம் குறித்து விவாதிக்கக் கோரி திமுக நாடாளுமன்றக் குழு தலைவர் கனிமொழி நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சென்னை : மதுரை மாவட்டம், மேலூர் அருகேயுள்ள நாயக்கர்பட்டியில் மத்திய அரசு டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க திட்டமிட்டு அதற்கான ஏலத்தை நடத்தி வருவதாக செய்திகள் வெளியான நிலையில், உடனடியாக இதற்கு தமிழ்நாட்டில் இருந்து எதிர்பார்ப்புகள் கிளம்பு தொடங்கியது. முதல்வர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, விசிக தலைவர் திருமாவளவன் என பலரும் எதிர்ப்புகளை தெரிவித்திருந்தார்கள்.
அது மட்டுமின்றி, தமிழக சட்டமன்றத்தில் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமும் கொண்டுவரப்பட்டது. இந்த சூழலில், தூத்துக்குடி எம்பி கனிமொழி மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெறக்கோரி நாடாளு மன்றத்தில் வலியுறுத்தியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அவர் பேசுகையில் ” மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்பி பெறவேண்டும். தமிழக முதல்வர் ஏற்கனவே கடிதம் எழுதியது மட்டுமின்றி, எதிர்ப்பு தெரிவித்து தீர்மானமும் கொண்டு வந்து இருக்கிறார். நானும் ஏற்கனவே, 2வது நாளாக நோட்டீஸ் அனுப்பியுள்ளேன். எனவே, அவை நடவடிக்கைகளை ஒத்திவைத்துவிட்டு விவாதம் நடத்த வேண்டும்.
தமிழ்நாடு சட்டமன்ற தீர்மானத்தை ஏற்று சுரங்க ஒப்பந்தத்தை ரத்துசெய்ய வேண்டும் எனவும் நான் இந்த நேரத்தில் கேட்டுக்கொள்கிறேன்” எனவும் கனிமொழி தெரிவித்துள்ளார்.
அதனை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பேசிய அந்த காணொளியை எடுத்து அதனையும் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு ” மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கடிதம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி, ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினேன்” எனவும் கனிமொழி தெரிவித்திருக்கிறார்.
மதுரையில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க இந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதியை திரும்ப பெறக்கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் இயற்றப்பட்ட தீர்மானம் மற்றும் மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களின் கடிதம் ஆகியவற்றை மேற்கோள்காட்டி, ஒன்றிய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க… pic.twitter.com/Mwiu56eZEV
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) December 11, 2024