நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்:வெளியானது இறுதி வாக்காளர் பட்டியல்!
சென்னை:நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில்,இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
விரைவில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன், மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நேற்று ஆலோசனை மேற்கொண்டார். இதனையடுத்து,தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் வாக்காளரின் படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை இன்று வெளியிடுவதாக முன்னதாக அறிவிக்கப்பட்டது.மேலும்,ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரிகள் இந்த பட்டியலை வெளியிடுகின்றனர் என்றும் இந்த நிகழ்வில் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதகவும் முன்னதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில்,நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறவுள்ள நிலையில்,இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி, அந்தந்த மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளின் முன்னிலையில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.குறிப்பாக,சென்னையில் 200 வார்டுகளுக்கான புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை சென்னை மாவட்ட தேர்தல் அலுவலரும்,மாநகராட்சி ஆணையருமான ககன்தீப் சிங் பேடி வெளியிட்டார்.அதன்படி,சென்னையில்
- மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 61,18,734.
- ஆண் வாக்காளர்கள் 30,23,803
- பெண் வாக்காளர்கள் – 30,93355
- மூன்றாம் பாலின வாக்காளர்கள் – 1,576
மேலும்,சென்னை மாநகராட்சியில் நடைபெறவுள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் 200 வார்டுகளுக்கு மொத்தம் 5794 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட உள்ளது.அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 622 வாக்குச் சாவடிகளும் குறைந்தபட்சமாக வளிமண்டலத்தில் 97 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.