நெல்லை மாவட்டம் தென்காசியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா அமமுகவில் இருந்து விலகி மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளதாக கூறினார். செய்தியாளர்களிடம் பேசிய இசக்கி சுப்பையா கூறுகையில் , ” என்னை கட்சியில் அறிமுகப் படுத்தியது நான் தான் என கூறுகிறார் தினகரன். ஆனால் 2011-ம் ஆண்டு முதல்வர் அம்மா அவர்கள் என்னை அறிமுகப்படுத்தினார்.
மேலும் என்னை வெற்றி பெற செய்தது நெல்லை மாவட்ட மக்கள்.அவர்களுக்கு விஸ்வசமாக இருப்பேன் என கூறினார்.மேலும் 2009-ம் ஆண்டு அதிமுகவில் தினகரன் இருந்தாரா என்பது தெரியவில்லை. நன்றாக செயல்பட்ட தலைமை தற்போது ஆட்டம் காண தொடங்கி உள்ளது.
மேலும் திமுக மற்றும் பாஜகவில் இருந்து எனக்கு அழைப்பு வந்தது. எனது தொண்டர்கள் மீண்டும் தாய் கழகத்திற்கு போகலாம் என கூறியதால் வருகின்ற 6-ம் தேதி மாலை 20 ஆயிரம் தொண்டர்களுடன் மீண்டும் அதிமுகவில் இணைய உள்ளேன்.
தானே நேரில் வந்து கட்சியில் இணைந்து கொள்வதாக முதல்வர் பழனிசாமி என்னிடம் கூறியுள்ளார்.எனக்கு எதிரிகளே கிடையாது .அனைவருமே நண்பர்கள் தான் . எஸ் .பி வேலுமணிக்கும் எனக்கும் பிரச்னை என கூறுவது தவறு. எஸ் .பி வேலுமணி எனக்கு நெருங்கிய நண்பர் என்று இசக்கி சுப்பையா கூறினார்.
பெங்களூர் : ஐபிஎல் போட்டிகள் தொடங்கிவிட்டது என்றாலே ஆர்சிபி ரசிகர்கள் "ஈ சாலா கப் நம்தே ...ஈ சாலா கப்…
சென்னை : டாஸ்மாக் டெண்டர் விவகாரத்தில் சுமார் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு நடைபெற்று இருக்கலாம் எனக் அமலாக்கத்துறை கூறிய…
கலிபோர்னியா : விண்வெளியில் சிக்கியிருந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோரை பத்திரமாக மீட்க டிராகன் விண்கலம் கடந்த மார்ச்…
டெல்லி : இசைஞானி இளையராஜா இம்மாதம் (மார்ச்) 8ஆம் தேதியன்று லண்டனில் தனது முதல் சிம்பொனி இசையை அரங்கேற்றினார். 34…
சென்னை : அஜித் நடிப்பில் கடைசியாக வெளியான விடாமுயற்சி படம் வசூல் ரீதியாக தோல்வி அடைந்த நிலையில், அடுத்ததாக மாஸ் கம்பேக்…
டெல்லி : இந்திய அமலாக்கத்துறையானது நாட்டில் சட்டவிரோதமாக பணப்பரிவர்த்தனை நடைபெறுவதை தடுக்கும் ஒரு அரசாங்க விசாரணை அமைப்பு ஆகும். இந்த…