பாஜக, அதிமுக கூட்டணியுடன், நடிகர் ரஜினி ஆட்சியை பிடிப்பார்,அவர் பின்னால் நான் நிற்பேன்- ராதாரவி அதிரடி

ரஜினி கட்சி ஆரம்பித்து முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டால் அவர் பின்னால் நான் நிற்பேன் என்று ராதாரவி தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சி ஆரம்பிப்பார் என்று அவரது ரசிகர்கள் அதிக எதிர்பார்ப்பில் இருந்து வருகின்றனர்.ஆனால் அவர் அதிகாரப்பூர்வமாக எந்த முடிவும் எடுத்ததாக தெரிவிக்கவில்லை.நாளுக்குநாள் ரஜினி கட்சி தொடங்குவார் என்ற செய்தி அதிகம் வலம்வந்து கொண்டுதான் இருக்கிறது.
இந்த நிலையில் ரஜினியின் அரசியல் குறித்து நடிகர் ராதாரவி கருத்து தெரிவித்துள்ளார்.அவர் கூறுகையில்,பாஜக, அதிமுக கூட்டணியுடன், நடிகர் ரஜினி ஆட்சியை பிடிப்பார்.ரஜினி கட்சி ஆரம்பித்து முதல்வர் வேட்பாளராக போட்டியிட்டால் அவர் பின்னால் நான் நிற்பேன்.
ரஜினி பொறுமையாக, சூழ்நிலைகளை உணர்ந்து நிதானமாக முடிவு எடுப்பவர்.ஆனால் எடுக்கும் முடிவுகள் தெளிவாக இருக்கும். எனவே விரைவில் அரசியலுக்கு வருவார் என்று தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
TNBudget 2025 : கிராமச் சாலைகள் மேம்படுத்த ரூ.2,200 கோடி..கலைஞர் கனவு இல்லம் திட்டதில்1 லட்சம் புது வீடுகள்!
March 14, 2025
LIVE : தமிழ்நாடு பட்ஜெட் 2025 தாக்கல் நேரலை!
March 14, 2025
“ஹிந்தி தான் பேசுவேன்” அடம்பிடித்த பெண் ஊழியர்! மகாராஷ்டிராவில் வெடித்த மொழி சர்ச்சை!
March 13, 2025