தமிழகத்தில் ரூ.56,229.54 கோடி முதலீட்டில் 1,74,999 பேருக்கு வேலை வாய்ப்பு -தமிழக அரசு..!

Published by
murugan

தமிழகத்தில் இந்த ஆண்டில் மட்டும் இதுவரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதாக அரசு தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்ததில் இருந்து பல்வேறு திட்டங்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்த வகையில் வேலைவாய்ப்பு வழங்கும் விதமாக பல புரிந்துணர்வு ஒப்பந்தங்களை கையொப்பமிட்டு வருகிறது. இந்தாண்டில் இதுநாள் வரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளதாகவும், புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம் உறுதி செய்யப்பட்ட முதலீடு ரூ.56,229.54 கோடி எனவும், 1.74 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என தமிழ்நாடு அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்த வருடம், அதாவது 2021-22, இன்றைய நாள் வரை 109 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டுள்ளது. இவற்றில் உறுதி செய்யப்பட்ட முதலீடு 56.229.54 கோடி ரூபாய் மற்றும் வேலைவாய்ப்பு 1,74,999 நபர்கள் ஆகும்.

இந்த முதலீடுகள் எரிசக்தி நிலையங்கள், மின்னணுவியல், மோட்டார் வாகன உதிரி பாகங்கள், தொழிற் பூங்காக்கள் வர்த்தகக் கிடங்கு மையங்கள், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, தகவல் தொழில் நுட்பம் / தகவல் தொழில் நுட்பச் சேவைகள், பொது உற்பத்தி, சிமெண்ட் உற்பத்தி, உணவுப் பதப்படுத்துதல், காலணிகள், மருந்துப் பொருட்கள், ஜவுளி போன்ற பல்வேறு துறைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், சமச்சீரான வளர்ச்சியை உறுதி செய்திடும் வகையில், இந்த முதலீடுகள், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்டங்களில் பரவலாக மேற்கொள்ளப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

GOGO

Published by
murugan
Tags: #TNGovt

Recent Posts

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

காலையில் அண்ணாமலை.. மாலையில் கூல் சுரேஷ்.. சாட்டையால் அடித்து ப்ரோமோஷன்.! வைரல் வீடியோ….

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் சாட்டையடி போராட்டம் நடத்தியது போல், நேற்று மாலை நடிகர் கூல் சுரேஷ் தனக்கு…

11 minutes ago
சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

சுசூகி நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி காலமானார்!

ஜப்பான்: சுசூகி மோட்டார்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஒசாமு சுசூகி (94) காலமானார். லிம்போமா என்ற ஒருவகை புற்றுநோயால் பாதிக்கப்பட்ட…

1 hour ago
கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

கேப்டன் விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு தினம்! அமைதி பேரணி நடத்த அனுமதி மறுப்பு…

சென்னை: கேப்டன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் 'விஜயகாந்த்' மறைந்து இன்றுடன் ஓராண்டாகிறது.  மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் முதலாம்…

1 hour ago

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடலுக்கு யமுனை நதிக்கரையில் இறுதிச் சடங்கு.!

டெல்லி: முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நல குறைவு காரணமாக, நேற்று முன்தினம் காலமானார். இப்பொது மறைந்த மன்மோகன் சிங்…

2 hours ago

“மன்மோகன் சிங்கிற்கு நினைவிடம் அமைக்கவேண்டும்”..பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதிய காங்கிரஸ்!

டெல்லி :  எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…

13 hours ago

மேற்கிந்திய தீவுகளை ஒயிட்வாஷ் செய்த இந்திய மகளிர் அணி! தீப்தி ஷர்மா படைத்த சாதனை!

வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு   3 டி0 போட்டிகள், 3 ஒரு…

13 hours ago