இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம்- வைரமுத்து..!
இலங்கை முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படமான “800” திரைப்படத்தில் முத்தையா முரளிதரனாக நடிகர் விஜய் சேதுபதி நடிக்கிறார். சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர்கள் வெளியானது.
இந்த படத்தில் முத்தையா முரளிதரனாக விஜய் சேதுபதி நடிப்பதற்கு எதிராகவும், ஆதரவாகவும் விமர்சனங்கள் எழுந்துள்ளன.முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளதால் முத்தையா இப்படத்திற்கு 800 என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
‘800’ படத்தில் நடிக்க வேண்டாம் என இயக்குநர்கள் பாரதிராஜா, சீனு ராமசாமி மற்றும் சேரன் உள்ளிட்ட பலர் விஜய் சேதுபதிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், பல அரசியல் தலைவர்களும் வேண்டுகோள் வைத்து வருகின்றனர்.
இந்நிலையில், இன உரிமைக்காகக் கலை உரிமையை விட்டுக் கொடுப்பதே விவேகம் என வைரமுத்து தெரிவித்துள்ளர். “800” படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதை தவிர்க்க சூசகமாக தெரிவித்துள்ளார்.
கலையாளர்
விஜய் சேதுபதிக்கு…சில நேரங்களில்
செய்து எய்தும் புகழைவிடச்
செய்யாமல் எய்தும் புகழே
பெரிதினும் பெரிது செய்யும்.நீங்கள் வளர்ந்து வருகிறீர்கள்.
வளர்பிறையில் கறை எதற்கு?இன உரிமைக்காகக்
கலை உரிமையை
விட்டுக் கொடுப்பதே விவேகம்;
நீங்கள் விவேகி.@VijaySethuOffl— வைரமுத்து (@Vairamuthu) October 15, 2020