நாளை ஒயின்ஷாப் மூடப்படும் – தமிழக அரசு உத்தரவு.!
உலக முழுவதும் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருக்கும் கொரோனா வைரஸ் இந்தியாவில் நாளுக்கு நாள் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இந்தியாவில் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 258 ஆக உயர்ந்துள்ளது. மேலும் ஒரு வெளிநாட்டவர் உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மத்திய, மாநில அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகிறது. மேலும் வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் வரும் 31ம் தேதி வரை பல விஷயங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் நாளை ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் இரவு 9 மணி வரை யாரும் வெளியே வரவேண்டாம் என்றும் ஊரடங்கை பின்பற்றுவோம் என பிரதமர் மோடி வலியுறுத்தியிருந்தார். இந்த நிலையில் மோடியின் அறிவிப்பை அடுத்து தமிழகத்தில் வரும் 22ம் தேதி (நாளை) பேருந்துகள், ரயில் சேவை, வணிக வளாகம், சிறிய மளிகை கடை முதல் பெரிய கடை வரை இயங்காது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில் நாளை ஒரு நாள் மட்டும் டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. நாட்டின் நன்மைக்காக நாளை சுய ஊடரங்கு உத்தரவை அடுத்து டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.