45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசும்…! மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் …! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில்,தென்கிழக்கு வங்கக்கடலில் உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 24 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி பின் புயலாக மாற வாய்ப்பு உள்ளது. மேற்கு வடமேற்கு திசையில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து வருகிறது.இதனால் 45-65 கி.மீ வேகத்தில் காற்று வீசும் என்பதால் அந்தமான் மற்றும் தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் .மேலும் தெற்கு கேரளா, குமரி, மாலத்தீவு, லட்சத்தீவு பகுதிகளுக்கும் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.