கடந்த 8-ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள களியக்காவிளை சோதனை சாவடியில் இரவு காவல்துறை சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் கொடூரமான முறையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்த கொலையில் சம்பவத்தில் அப்துல் சமீம், தவுபிக் என்ற இரு தீவிரவாதிகள் போலீசார் கைது செய்தனர்.
பின்னர் கைது செய்யப்பட்ட இருவரையும் போலீசார் சிறையில் அடைத்தனர்.இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட தீவிரவாதிகள் 2 பேரையும் கடந்த 21-ம் தேதி நாகர்கோவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி 28 நாட்கள் போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க போலீஸ் தரப்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.
ஆனால் அந்த மனுவை விசாரித்த நீதிபதி அப்துல் சமீம், தஃபீக்கை இருவரையும் 10 நாள்கள் மட்டுமே விசாரிக்க போலீசாருக்கு நாகர்கோவில் நீதிமன்றம் அனுமதி கொடுத்தது. இதையெடுத்து போலீசார் அப்துல் சமீம், தஃபீக்கை 2 பேரிடமும் விசாரணை நடத்தினர்.
இதையெடுத்து எஸ்எஸ்ஐ வில்சன் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை அப்துல் சமீம், தவுபிக் இருவரும் கேரளா மாநிலம் எர்ணாகுளம் பேருந்து நிலையம் அருகே உள்ள ஒரு கழிவு நீரோடையில் வீசியது விசாரணையில் தெரியவந்தது. இதையெடுத்து தமிழக போலீசார் அப்துல் சமீம், தஃபீக் இருவரையும் கேரளா அழைத்து சென்று கொலைக்கு பயன்படுத்தப்பட்ட துப்பாக்கியை நேற்று கைப்பற்றினர்.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…