காவல் துறை அதிகாரி குத்தியும், சுட்டும் கொலை செய்த கொலைகார பாவிகளை காவல்துறை கைது செய்தது.. தீர்ப்பு தீர்வாக அமைய பொதுமக்கள் வேண்டுகோள்..
- காவல் துறை உதவி ஆய்வாளர் வில்சனை குத்தியும் சுட்டும் கொன்ற கொடூரர்கள் கைது.
- இவர்களுக்கு அளிக்கும் தண்டனை தவறு செய்பவர்களுக்கு சுருக்கு கயிறாக அமைய வேண்டும் என பொதுமக்கள் கருத்து.
கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளை சோதனை சாவடியில் பணியில் இருந்த சிறப்பு காவல் துறை உதவி ஆய்வாளர் வில்சனை அப்துல்சமீம் மற்றும் தவ்பீக் என்ற இரு கொடூரர்கள் கடந்த 8- ஆம் தேதி துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொன்று விட்டு கேரளாவில் தலைமறைவானார்கள்.
இது தொடர்பான புகைப்படங்களை தமிழக காவல்துறை வெளியிட்டு இரு மாநில காவல்துறையினரும் தீவிரமாக தேடி வந்த நிலையில் அவர்கள் இருவரும் கடந்த 11ஆம் தேதி கர்நாடகா மாநிலம் உடுப்பியில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் கர்நாடக மாநில காவல்துறை அவர்களிடம் நடத்திய விசாரணையில் உடுப்பியில் இருந்து மங்களூரு சென்று அங்கிருந்து நேபாளம் செல்ல இருவரும் திட்டமிட்டிருந்தது தெரிய வந்தது.
இந்நிலையில் அவர்கள் இருவரையும் கர்நாடக போலீஸ், குமரி மாவட்ட காவல்துறையினரிடம் ஒப்படைத்தது. இந்த விவகாரத்தில் காவலர்கள் மீதே கை வைத்த இந்த கயவர்களை தகுந்த தண்டனை பெற்றுத்தருவதுடன் இனி இதுபோன்ற சம்பவம் நிகழாமல் இவர்களது தண்டனை அமைய வேண்டும் என பொதுமக்கள் கருதுகின்றனர்.