எஸ்.ஐ வில்சன் கொலை வழக்கு.. கைது செய்யப்பட்டவர்கள் தற்கொலை பயிற்சி பெற்றவர்கள் என அதிரவைக்கும் தகவல்.. தமிழகம் தீவிரவாதிகளின் கூடாரமாகிறதா?.. பொதுமக்கள் வேதனை..

Default Image
  • கேரள மாநில எல்லையில் அமைந்துள்ள களியக்காவிளை சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர்  வில்சன் கடந்த 8-ம் தேதி துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொடூரமாக  கொலை செய்யப்பட்டார்.
  • இதில் கைது செய்யப்பட்டவர்கள் தற்கொலை படைபயிற்சி பெற்றவர்கள் என விசாரனையில் தகவல்.

அந்த வழக்கு குறித்து தமிழக, கேரள காவல்துறையினர் கூட்டாக விசாரணை நடத்திவருகின்றனர்.இந்த வழக்கில், தெளஃபீக், அப்துல் சமீம் ஆகிய இருவர் தான் இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டதாகவும், அவர்களுக்கு உதவியாக பலர் செயல்பட்டதாகவும், இவர்கள் தற்கொலை படை பயிற்ச்சி பெற்றவர்கள் என்பதும் விசாரணையில்  அதிர வைக்கும் தகவல் வெளியானது. இந்த வழக்கு தொடர்பாக கேரளத்தில் நெய்யாற்றின்கரை, தென்மலை பகுதிகளில் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில் கர்நாடகா மாநிலம் உடுப்பியில் வைத்து தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோர் நேற்று அதிரடியாக  கைது செய்யப்பட்டுள்ளனர்.

Related image

இன்று இவர்கள் தமிழக காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டனர். கடந்த திங்கள்கிழமை கர்நாடக மாநிலம் பெங்களூர் ராமநகரியில் இஜாஸ் பாஷா என்றவனை  கைது செய்யப்பட்டதுதான் குற்றவாளிகளை பிடிக்க எளிதாக  அமைந்தது என்கிறது காவல்துரை வட்டாரம்.  இந்த  இஜாஸ் பாஷா ஒரு டாக்சி டிரைவர் ஆவர். இவர் மும்பையில் இருந்து கொண்டு வந்த துப்பாக்கியை பெங்களூரில் வைத்து தெளஃபீக்கிடம் கொடுத்துள்ளதை அவர் ஒப்புக்கொண்டுள்ளார். திருவனந்தபுரத்தில் இருந்து வேராவல் விரைவு ரயிலில் குற்றவாளிகள் பயணம் செய்வதாக இஜாஸ் பாஷா தகவல் கொடுத்தார். அதன்படி கர்நாடகா  காவல்துறை மற்றும்  தமிழ்நாடு கியூ பிரிவு காவல் துறை மற்றும் ரயில்வே காவல்துறையினரும் சேர்ந்து தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரை நேற்று கைது செய்துள்ளது.

Image result for தற்கொலைப்படை தீவிரவாதிகள்

எஸ்.எஸ்.ஐ. வில்சன் கொலை வழக்கில் தங்களுக்கு உதவி இரண்டுபேர் குறித்து தெள்ஃபீக் தெரிவித்திருக்கிறார். அவர்களை பிடிக்க இப்போது தீவிர தேடுதல் வேட்டை நடக்கிறது. இதற்கிடையில் தெளஃபீக் மற்றும் அப்துல் சமீம் ஆகியோரிடம்  தமிழக கியூ பிரிவு காவல்துறையினர் நடத்திய விசாரணையில்  இவர்களின் தீவிரவாத அமைப்பில் மூன்றுபேர் தற்கொலைப்படை தாக்குதலுக்கு பயிற்சி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடகா மற்றும் டெல்லியை மையமாகக் கொண்டு இவர்கள் செயல்பட்டுள்ளனர். அல் உம்மா என்ர பயங்கரவாத இயக்கத்தை இந்திய அரசு தடை செய்ததை தொடர்ந்து தமிழ்நாடு நேஷனல் லீக் என்ற பெயரில் அமைப்பை தொடங்கியுள்ளனர்.இந்த விவகாரம் தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்