தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில் மணல் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்து பின்னர் அனுப்புகின்றனர்.
இந்த சோதனைச் சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த வருகின்றன. இதையெடுத்து நேற்று முன்தினம் இரவு சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்துள்ளார்.அப்பொழுது சோதனை சாவடி அருகில் ஒரு கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் பணியில் இருந்த வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், வில்சன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் பணிபுரிவோர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : ஐபிஎல் தொடரில் முதல் போட்டியில் தோல்வியடைந்த குஜராத் - மும்பை அணிகள் இன்று மோதுகின்றனர். அகமதாபாத் நரேந்திர…
அமெரிக்கா : உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், முன்னதாக ட்விட்டர் என்று அழைக்கப்பட்ட X-ஐ, தனது சொந்த…
சென்னை : இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள "குட் பேட் அக்லி" திரைப்படம் வரும் ஏப்ரல் 10 ஆம் தேதி…
சென்னை : நடிகர் கமல்ஹாசனுக்கு சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI) ஒரு முக்கியமான எச்சரிக்கை அறிவிப்பை…
மதுரை : மதுரை மாவட்டம் கள்ளபட்டியைச் சேர்ந்த முத்துக்குமார் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலைக் காவலராகவும், காவல் ஆய்வாளரின்…
சென்னை : ஐபிஎல்-ல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான நேற்றைய போட்டியில், பெங்களூரு…