வில்சன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி – மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

- சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார்.
- வில்சன் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் இருந்து கேரளாவிற்கு மணல் கடத்தப்படுவதாக புகார் எழுந்த நிலையில் மணல் கொள்ளையர்களை பிடிப்பதற்காக கன்னியாகுமரி மாவட்ட போலீசார் பல நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன் காரணமாக தமிழக -கேரள எல்லையில் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டு வாகனங்களை சோதனை செய்து பின்னர் அனுப்புகின்றனர்.
இந்த சோதனைச் சாவடியில் தினமும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் இருந்த வருகின்றன. இதையெடுத்து நேற்று முன்தினம் இரவு சோதனைச்சாவடியில் சப்-இன்ஸ்பெக்டர் வில்சன் பணியில் இருந்துள்ளார்.அப்பொழுது சோதனை சாவடி அருகில் ஒரு கார் ஒன்று வந்து நின்றது. அதிலிருந்து இறங்கிய மர்ம நபர்கள் பணியில் இருந்த வில்சனை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பி சென்றனர்.இது தொடர்பாக விசாரணை நடைபெறுகிறது.
“எனது கணவர் குடும்பத்தைவிட காவல்துறையை அதிகம் நேசித்தவர்” என்று உயிரிழந்த வில்சனின் மனைவி கூறியிருப்பது மனவேதனை தருகிறது.
குற்றவாளிகள் யாராயினும் அவர்கள் தண்டிக்கப்பட தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையினர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்க வேண்டும்! pic.twitter.com/1iVjaK74PM
— M.K.Stalin (@mkstalin) January 11, 2020
இந்நிலையில் எஸ்.எஸ்.ஐ வில்சன் குடும்பத்திற்கு திமுக சார்பில் ரூ.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிவிக்கையில், வில்சன் கொலை வழக்கில் குற்றவாளிகளுக்கு தண்டனை கிடைக்க அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல்துறையில் பணிபுரிவோர் கொல்லப்படுவது இதுவே கடைசியாக இருக்கவேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.ஏற்கனவே வில்சன் குடும்பத்திற்கு ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
மீனவர்கள் பிரச்சனை: “கூட்டுப் பணிக்குழுவை உடனடியாக கூட்டுங்கள்..” – மு.க.ஸ்டாலின் கடிதம்.!
February 23, 2025
NDvsPAK : டாஸில் மோசமான சாதனை படைத்த இந்தியா!! விக்கெட்டுகளை இழந்து மந்தமாக ஆடி வரும் பாகிஸ்தான்…
February 23, 2025
வசூல் ராஜா யாரு? டிராகனா? NEEK-ஆ? இரண்டு படங்களின் பாக்ஸ் ஆபிஸ் விவரம்.!
February 23, 2025