உயிர்சேதம் ஏற்படும்வரை காத்திருப்பீர்களா..? – அண்ணாமலை
இதுவரை தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் நடந்துவிட்டது என அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
கோவை உக்கடம் அருகே, ஈஸ்வரன் கோயில் அருகே கார் கேஸ் சிலிண்டர் வெடித்த விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையில் 6 தனிப்படைகள் அமைத்து விசாரணை நடந்து வருகிறது. விசாரணையில் பலியானவர் உக்கடத்தை சேர்ந்த ஜமேசா முபின் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பாஜக தலைவர் அண்ணாமலை, கோவையில் குண்டு வெடிப்பு நடந்து 36 மணி நேரங்கள் கடந்துவிட்டன. தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மக்களை சந்தித்து இதைப்பற்றி பேச தயங்குவது ஏன்? இதுவரை தமிழகம் கண்டிராத தற்கொலைப்படை தாக்குதல் இந்த திறனற்ற திமுக ஆட்சியில் நடந்துவிட்டது என தெரிவித்துள்ளார்.