10-ம் வகுப்பு படித்த கிரிக்கெட் வீரர் சச்சினை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா?- நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வி!

Default Image

10ம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சினை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி கிருபாகரன் அமர்வு கேள்வியெழுப்பியுள்ளது.

இந்தியாவிலுள்ள சிறப்புத்திறன் மற்றும் மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர்கள், ஒலிம்பிக் உள்ளிட்ட பல போட்டிகளில் பங்கேற்று அதிகளவில் பதக்கங்களும், பரிசுகளும் பெற்றுள்ளனர். அவர்களுக்கு மத்திய மற்றும் மாநில அரசு, பரிசுகளை வழங்குகிறது.

ஆனால் மற்ற விளையாட்டு வீரர்களுக்கு இணையாக இவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவில்லை. இதுதொடர்பாக உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மதுரையை சேர்ந்த மதுரேசன் என்னவர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு, இன்று நீதிபதி கிருபாகரன் மற்றும் புகழேந்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அதனை விசாரித்த நீதிபதிகள், 10 ஆம் வகுப்பு படித்துவிட்டு கிரிக்கெட்டில் சாதனை படைத்த சச்சின் டெண்டுல்கரை அலுவலக உதவியாளராக நியமிப்பீர்களா? என கேள்வியெழுப்பியுள்ளார். மேலும், 90 க்கும் மேற்பட்ட பதக்கங்களை பெற்ற மாற்று திறனாளிக்கு, பத்தாவது மட்டுமே படித்த காரணத்தால் அலுவலக உதவியாளர் பணி கொடுத்ததை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் தெரிவித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்