சாதியரீதியிலான வன்கொடுமைகள் நடப்பதையாவது ஒப்புக்கொள்வீரா? முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் கேள்வி எழுப்பிய பா.ரஞ்சித்!

சாதியரீதியிலான வன்கொடுமைகள் நடப்பதையாவது ஒப்புக்கொள்வீரா? என முதல்வர் முகஸ்டாலினுக்கு இயக்குநர் பா.ரஞ்சித் கேள்வி எழுப்பியுள்ளார்.

mk stalin pa ranjith

சென்னை : முதல்வர் ஸ்டாலின் நேற்று பொதுமக்களின் கேள்விகளுக்கு ‘உங்களில் ஒருவன்’ நிகழ்ச்சி மூலமாக  பதில் அளித்து கொண்டிருந்தார். அரசியல், கூட்டணி விவகாரங்கள், தமிழகத்தில் இடம்பெற்ற சில சமூகக் கோர்வைகள், மற்றும் மணிப்பூர் குடியரசுத் தலைவர் ஆட்சி குறித்த கேள்விகளுக்கு பதிலளித்திருந்தார். இதை தனது சமூக வலைதளங்களிலும் பகிர்ந்துள்ளார். பதில் அளித்த அந்த வீடியோவையும் தனது சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்திருந்தார்.

இந்த சூழலில், அதனை பார்த்த இயக்குநர் பா.ரஞ்சித் சாதியரீதியிலான வன்கொடுமைகள் நடப்பதையாவது ஒப்புக்கொள்வீரா? என மு.க.ஸ்டாலினை நோக்கி தனது கேள்விகளை எழுப்பியுள்ளார். இது குறித்து அவர் தனது எக்ஸ் வலைத்தள பக்கத்தில் கூறியதாவது ” தமிழ்நாட்டில் மிகக் கொடுமையான சாதியரீதியிலான வன்கொடுமைகள் தங்கு தடையின்றி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. கடந்த சில தினங்களில் மட்டும் பல வன்முறை சம்பவங்கள் தலித் மக்களின் மீது நிகழ்த்தப் பட்டிருக்கிறது. இதை தடுக்க அல்லது குறைந்தப்பட்சம் இப்படி நடந்துகொண்டு இருக்கிறது என்பதையாவது ஒப்புகொள்வீரா???  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களே!!

தங்கள் அமைச்சரவையின் கீழ் இயங்கும், ஆதி திராவிட துறைகளுக்கும், தனித்தொகுதி MLA, MP அவர்களுக்கும் இதை விட வேறு முக்கியமான பணிகள் இருப்பதால் நாங்கள் வேண்டுமானால், சமீப காலங்களில் தலித்துகள் மீது நிகழ்த்தப்பட்ட வன்கொடுமைகள் குறித்து அறிக்கை சமர்ப்பிக்கிறோம். நன்றி” எனவும் காட்டத்துடன் இயக்குநர் பா.ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், மதுரை, பாலமேடு பகுதியில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் தலித் மக்களுக்கு எதிரான சாதி பாகுபாடு கடைப்பிடிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்திருந்தது. அதைப்போல, சிவகங்கை மாவட்டத்தில் புல்லட் பைக் ஓட்டியதற்காக தலித் இளைஞர் மீது தாக்குதல் நடந்ததாக புகார்கள் எழுந்தது. இத்தகையக சம்பவங்களை வைத்து தான் பா.ரஞ்சித் கேள்விகளை எழுப்பியுள்ளதாக தெரிகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்