த.வெ. க தலைவர் விஜய்க்கு Y பாதுகாப்பா? நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் சொன்ன பதில்!

விஜய்க்கு Y பாதுகாப்பா அளிக்கப்பட்டது குறித்த கேள்விக்கு எனக்குலாம் தேவையில்லை நான்தான் நாட்டுக்கே பாதுகாப்பு என சீமான் பதில் அளித்துள்ளர்.

tvk vijay seeman

சென்னை : நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளித்திருப்பது குறித்தும்..அண்ணாமலை ஒட்டு பற்றி தெரிவித்த கருத்துக்கள் உட்பட பெரியார் புகைப்படத்தை அரசியளுக்காக பயன்படுத்துவதாக அவர் மீது கொடுக்கப்பட்ட மனு வரை கேட்கப்பட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

விமான நிலையத்திற்கு வந்தவுடன் செய்தியாளர் ஒருவர் ” பிரபாகரனின் படத்தை சீமான் பொதுவெளியில் அரசியல் ஆதாயத்திற்காக  பயன்படுத்துவதற்கு தடை விதிக்க  கோரி உங்கள் மீது மனு அளிக்கப்பட்டுள்ளது அது குறித்து உங்கள் கருத்து என்ன என கேட்டனர். அதற்கு பதில் அளித்த சீமான் ” அதில் அரசியல் ஆதாயம் இருக்கிறது என்றால் நீங்களும் அதனை பயன்படுத்திக்கொள்ளுங்கள். அதற்காக தானே நானும் இவ்வளவு பாடுபடுகிறேன்.

புகைப்படத்தில் ஆதாயம் இருக்கிறது சொல்றீங்க எல்லாரும் பயன்படுத்துங்க…எல்லாருடைய கட்சியிலும் படத்தை போடுங்கள்..ஐயா கருணாநிதி படத்துக்கு இடையே போடுங்க..அம்மையார் ஜெயலலிதா புகைப்படத்திற்கு கிட்டே போடுங்கள். இப்போது பேசிக்கொண்டு இருக்கும் பைத்தியம் புகைப்படத்திற்கு பக்கத்திலும் போடுங்கள். 200கும் மேலே வழக்கு உள்ளது. பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு வேறு நாடுகளில் இறங்கவிடமாட்டிக்கிறார்கள். அதற்கு காரணம் புகைப்படம் தான்” என சீமான் பதில் அளித்தார்.

அதனைதொடர்ந்த்து தவெக தலைவர் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு  அளித்தது பற்றி செய்தியாளர் கேள்வி கேட்டார். அதற்கும் பதில் அளித்த அவர் ” என்னுடைய சொந்த நாட்டில் எனக்கு பாதுகாப்பு தேவையில்லை. என்னைப்பொறுத்தவரை நான் தான் இந்த நாட்டிற்கு பாதுகாப்பு. நாங்களே ஒரு வெடிகுண்டு..நாங்கள் ஒரு வார்த்தை பேசினால் ஒரு வாரம் வரைக்கும் ஓடி கொண்டு இருக்கிறது” என தெரிவித்தார்.

அதன்பின் அண்ணாமலை ஓட்டு பிச்சை எடுக்க களத்திற்கு வந்த அரசியல்வாதிகளை புறம்தள்ள வேண்டும் என்று பேசியிருந்ததை மறைமுகமாக சாடும் வகையில் பேசினார். இது குறித்து பேசிய சீமான் ” ஒட்டு பிச்சை எடுக்கிறீர்கள் என்று சொல்கிறீர்கள் அப்போ நீங்கள் என்ன செய்கிறீர்கள்? உங்களுக்கு அவுங்களே வீட்டிற்கு வந்து தந்துவிட்டு செல்கிறார்களா? இப்படியெல்லாம் பேசுவது ஆநாகரீகமான ஒன்று” எனவும் சீமான் பேசினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

DMKProtest
gold price
virat kohli lion
CrimeAgainstWomen
LIVE DMK
Maaveeran sk
rachin ravindra