geetha jeevan
கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தனர். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற காலதாமதமாகி வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.
இதனை தொடர்ந்து, செப்.15-ஆம் தேதி மகளிருக்கு ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடியே, தகுதி வாய்ந்த மகளிருக்கு ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.
இத்திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 உரிமை தொகை செலுத்தப்பட்டுள்ளது. தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்து இருந்த நிலையில் இது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்குக்கு பின் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
அப்போது பேசிய அவர், திருநங்கைகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றும், இது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும், மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 22 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…