திருநங்கைகளுக்கு மகளிர் உரிமை தொகை வழங்கப்படுமா..? – அமைச்சர் கீதாஜீவன் பதில்

geetha jeevan

கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது, முன்னாள் எதிர்க்கட்சி தலைவராக இருந்த மு.க.ஸ்டாலின் அவர்கள் மகளிருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தார். சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியில் அமர்ந்தனர். இந்த வாக்குறுதியை நிறைவேற்ற காலதாமதமாகி வந்த நிலையில், எதிர்க்கட்சிகள் விமர்சனங்களை முன்வைத்து வந்தனர்.

இதனை தொடர்ந்து, செப்.15-ஆம் தேதி மகளிருக்கு ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமை திட்டம் தொடங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அறிவித்தபடியே, தகுதி வாய்ந்த மகளிருக்கு ரூ.1000 வழங்கும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தில் 1.06 கோடி பயனாளிகளின் வங்கிக் கணக்கில் ரூ.1,000 உரிமை தொகை செலுத்தப்பட்டுள்ளது. தகுதி இருந்தும் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டிருந்தால், 30 நாட்களுக்குள் மேல்முறையீடு செய்யலாம் என அரசு அறிவித்து இருந்த நிலையில் இது தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் திமுக மகளிர் தொண்டரணி சார்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா கருத்தரங்குக்கு பின் அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.

அப்போது பேசிய அவர், திருநங்கைகளுக்கு உரிமைத் தொகை வழங்குவது குறித்து விரைவில் முதல்வர் அறிவிப்பார் என்றும், இது தொடர்பான கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருவதாகவும்,  மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக 22 திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்