பெட்ரோல்,டீசல் விலையில் மாற்றமா? – இன்றைய நிலவரம்!
சென்னை:இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும், அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல்,டீசல் விலைகளை,எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்து வருகின்றன.இதனால்,பெட்ரோல்,டீசல் விலையில் அவ்வப்போது மாற்றங்கள் ஏற்படுவதுண்டு.
இந்நிலையில்,சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40-க்கும்,அதைப்போல்,ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43-க்கும் விற்பனை செய்யப்படுகின்றது.66-வது நாளாக பெட்ரோல்,டீசல் விலை மாற்றமின்றி ஒரே விலையிலேயே விற்பனை செய்யப்படுகின்றன.
ஆனால்,சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை தற்போது கணிசமாக குறைந்தாலும் பெட்ரோல்,டீசல் விலையானது ஏற்றமாகவே உள்ளது.இதன்காரணமாக,பெட்ரோல்,டீசல் விலையேற்றம் என்பது வாகன ஓட்டிகளுக்கு பெரும் சுமையாக கருதப்படுகிறது.இதனால்,பெட்ரோல்,டீசல் விலை மேலும் குறைக்கப்படவேண்டும் என்று வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.