+2 பொதுத்தேர்வு நடக்குமா..? ரத்தாகுமா..? – நாளை ஆலோசனை..!
+2 பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து கல்வியாளர்களுடன் நாளை மாலை ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் உள்ள கருணாநிதியின் உருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், +2 பொதுத்தேர்வு நடத்துவது என்பது குறித்து கல்வியாளர்களுடன் நாளை மாலை ஆலோசனை நடத்தப்பட உள்ளது.
அவர் பிளஸ் 2 தேர்வு நடத்தலாமா..? அல்லது வேண்டாமா என்பது குறித்து இரண்டு நாட்களில் கல்வியாளர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகளை பெற்று நாளை மறுநாள் முதல்வரிடம் தெரிவிப்பதாக கூறினார்.
மேலும், 2013, 2017 மற்றும் 2018-ஆம் ஆண்டுகளில் ஆசிரியர் தகுதி தேர்வு எழுதி காத்திருப்பவர்களுக்கு பணி வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.