தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவித்த ஏ.ஆர்.ரகுமான்…!
தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க மக்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி என ஏ.ஆர்.ரகுமான் ட்வீட்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், நேற்று ஏ.ஆர்.ரஹ்மானின் முதல் மகள் கதீஜா – ரியாஸ்தீன் ஷேக் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்டார். இந்த விழாவில் கலந்து கொண்டு, முதல்வர் அவர்கள் மணமக்களை வாழ்த்தி ஆசீர்வதித்தார்.
இந்த நிலையில், ஏ.ஆர்.ரகுமான் மகளின் திருமண வரவேற்பு விழாவில் கலந்து கொண்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘தமிழ்நாட்டின் ஆற்றல் மிக்க மக்கள் முதல்வருக்கு நெஞ்சார்ந்த நன்றி’ என பதிவிட்டுள்ளார்.