ஸ்டெர்லைட் ஆலை மீண்டும் திறக்கப்படுமா ! ஜூலை 4 ம் தேதி வழக்கு ஒத்திவைப்பு !
தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை திறக்கக் கோரி வேதாந்த நிறுவனம் தொடுத்த வழக்கு விசாரணையை ஜூலை 4 ம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வேதாந்தா குழுமம் சார்பில் தூத்துக்குடியில் இயங்கி வரும் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி கடந்த ஆண்டு தூத்துக்குடியில் பெரும் போராட்டம் நடைபெற்றது. அப்போது காவலர்கள் இடையில் புகுந்து 13 பேரை சுட்டுக் கொன்றனர். உடனடியாக, தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், மூடப்பட்ட ஆலையை மீண்டும் திறக்கக் கோரி சென்னை உயர் நீதி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. விசாரணை தொடர்ந்து நடந்து வரும் நிலையில், இன்றைய தினம் ஸ்டெர்லைட் தரப்பில், தூத்துக்குடி சிப்காட்டில் மொத்தம் 67 ஆலைகள் இருக்கும் நிலையில் ஸ்டெர்லைட்டிற்கு மட்டும் தடை விதித்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
மேலும் ஸ்டெர்லைட் போராட்டத்தில் ஒரே நேரத்தில் 20,000 பேர் எப்படி கூடினார்கள் இது ஒரு திட்டமிட்ட சதி என்றும், இதற்காக சீனா நிறுவனம் ஓன்று நிதி வழங்கி மக்களை மூளைச்சலவை செய்திருப்பதாகவும் தெரிவித்தனர்.இவர்களது வாதங்களை கேட்ட நீதிபதி வலக்கை ஜூலை 4ம் தேதிக்கு விசாரிக்க உத்தரவிட்டார்.