சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? – கவிஞர் வைரமுத்து

vairamuthu

கருத்துரிமை இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறவர்களுள் நானும் ஒருவன் என கவிஞர் வைரமுத்து ட்வீட். 

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளராக சீமானின் @SeemanOfficial என்ற அவரது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு முடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த பக்கத்தில், சட்டப்பூர்வ கோரிக்கையை ஏற்று சீமானின் அதிகாரப்பூர்வ கணக்கு இந்தியாவில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என ட்விட்டர் நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.

இதுகுறித்து கவிஞர் வைரமுத்து, வன்மையாகக் கண்டிக்கிறேன். சுட்டுரையை முடக்கிவிட்டால் சீமான் தீர்ந்து போவாரா? வெயிலுக்கு எதிராகக் குடைபிடித்தால் காணாமற் போகுமோ கதிரவன்? கருத்தைக் கருத்தால் எதிர்கொள்ளுங்கள்; கை கால்களைக் கட்டாதீர்கள் கருத்துரிமை இன்னும் உயிரோடு இருப்பதாக நம்புகிறவர்களுள் நானும் ஒருவன்.’ என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்