தமிழகத்தில் பாஜகவை காணவில்லை என கூறும் அரசியல் தலைவர்கள் விவாதத்திற்கு வர தயாரா?தமிழக பாஜக தலைவர் தமிழிசை
பிரதமர் மோடி படுதோல்வியடைவார் எனக்கூறிய வைகோவுக்கு நன்றி என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறுகையில்,பிரதமர் மோடி படுதோல்வியடைவார் எனக்கூறிய வைகோவுக்கு நன்றி. அவருடைய பேச்சு எப்போதுமே எதிர்மறையாகும் தமிழகத்தில் மக்கள் நம்பும் ஒரே கட்சி பாஜக மட்டும்தான்.மதம், சாதி சார்பற்றவர்களாக தங்களை காண்பித்துக்கொண்டு அரசியல் ஆதாயம் தேடுகிறார்கள்.தமிழகத்திற்கு பாஜக என்ன செய்தது என கேட்கும் ஸ்டாலின், திமுக-காங்கிரஸ் கூட்டணி தமிழகத்திற்கு என்ன செய்தது என கூற வேண்டும். தமிழகத்தில் பாஜகவை காணவில்லை என கூறும் அரசியல் தலைவர்கள் விவாதத்திற்கு வர தயாரா?..கர்ப்பிணிக்கு ஹெச்ஐவி ரத்தம் செலுத்தப்பட்ட விவகாரத்தில் அரசை விமர்சிக்கும் ஸ்டாலின், கனிமொழி என்றைக்காவது அரசு மருத்துவமனை சென்றுள்ளார்களா? என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்