தமிழகத்தில் +2 பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா..? இன்று முடிவு..!
தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் வழக்கமாக +2 பொதுத்தேர்வு மார்ச் மாதம் தொடங்கி ஏப்ரல் மாதத்தில் முடியும். ஆனால் கொரோனா காரணமாக இந்த ஆண்டு +2 பொதுத்தேர்வு மே மாதத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதனால், மே 3-ஆம் தேதி முதல் தேர்வு தொடங்கும் என கூறப்பட்டது.
இதற்கிடையில் தமிழகத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மே 2-ஆம் தேதி நடைபெற உள்ளதால் மே 3-ஆம் தேதி நடக்க இருந்த மொழிப்பாடத் தேர்வை மட்டும் ஒத்தி வைத்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது. இதன்காரணமாக மே 5-ஆம் தேதி முதல் பொதுத்தேர்வு தொடங்க இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் இதுவரை இல்லாத அளவிற்கு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையில், மே 5-ஆம் தேதி தமிழகத்தில் 12-ஆம் வகுப்புக்கு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் தற்போது அதிகரித்து வரும் கொரோனா மத்தியில் பொதுத் தேர்வு திட்டமிட்டபடி நடத்தப்படுமா.? அல்லது ஒத்திவைக்கலாமா என்பது பற்றி முடிவு செய்ய தலைமை செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது.
இந்த கூட்டத்திற்குப் பிறகு பொதுத்தேர்வு ஒத்திவைக்கப்படுமா அல்லது நடைபெறுமா என்பது தெரியவரும். நேற்று மத்திய அரசு சிபிஎஸ்இ 10-ஆம் பொதுத் தேர்வை ரத்து செய்தும், 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ஒத்திவைத்து உத்தரவை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.