தமிழகத்தில் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா? ஸ்டாலின் கேள்வி
தமிழகத்தில் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா? என்று ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழகத்தில் கொரானாவின் தாக்கம் அதிகரித்து வருகிறது. இதை தொடர்ந்து தமிழகத்தில் தான் கொரோனாவால் உயிரிழந்த மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகம் என சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்பட்டது.
இதற்கு அண்மையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ,தமிழகத்தில் கொரோனாவால் 43 மருத்துவர்கள் உயிரிழந்ததாக வெளியான செய்தி மிகவும் தவறானது.
மருத்துவர்கள் இறப்பு குறித்த தகவல்களை இந்திய மருத்துவர் சங்கமே மறுத்துள்ளது. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை வெளியிபவர்களுக்கு சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், தவறான தகவல்களை வெளியிட்டு மருத்துவர்களின் மன உறுதியை சீர் குலைக்க வேண்டாம் எனவும் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.
இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தந்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பதிவில்,தமிழகத்தில் 43 மருத்துவர்கள் கொரோனாவால் இறந்தார்கள் என்ற செய்தியை அமைச்சர் விஜயபாஸ்கர் மறுத்தார். இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் தெரிவித்திருக்கிறது. இதில் தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா? மரணங்களை மறைப்பது தடுக்கும் வழியன்று என்று பதிவிட்டுள்ளார் .
தமிழகத்தில் 43 மருத்துவர்கள் #Covid19 இல் இறந்தார்கள் என்ற செய்தியை @Vijayabaskarofl மறுத்தார். இந்தியாவில் 196 மருத்துவர்கள் இறந்திருப்பதாக @IMAIndiaOrg தெரிவித்திருக்கிறது. இதில் தமிழக மருத்துவர்களின் எண்ணிக்கையை அமைச்சர் அறிவிப்பாரா?
மரணங்களை மறைப்பது தடுக்கும் வழியன்று! pic.twitter.com/sih0qa248X
— M.K.Stalin (@mkstalin) August 8, 2020