பால் உற்பத்தியாளர் போராட்டம் தொடருமா? ரத்தா..? – சங்க தலைவர் ராஜேந்திரன்
பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடருமா? ரத்தா? என்பது குறித்து மாலை 5 மணிக்கு தெரிவிக்கப்படும் என சங்க தலைவர் பேட்டி.
தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உயர்த்த வேண்டும் என தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் தொடர்ந்து கோரிக்கைகளை முன்வைத்து வரும் நிலையில், கடந்த 10ஆம் தேதி பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் கருப்பு கொடி ஏந்தியும் பல்வேறு போராட்டங்களை முன்வைத்து வந்தனர்.
மேலும், பசும்பால் விலையை 42ஆக உயர்த்தவேண்டும் எனவும், எருமை பால் விலையை 51ஆக உயர்த்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் உடன், தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கத்தினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனை தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் சங்க தலைவர் ராஜேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
மாலை 5 மணிக்கு முடிவு அறிவிக்கப்படும்
அவர் கூறுகையில், பால் உற்பத்தியாளர்கள் போராட்டம் தொடருமா? ரத்தா? என்பது குறித்து மாலை 5 மணிக்கு தெரிவிக்கப்படும். கோரிக்கைகளை முதலமைச்சரிடம் எடுத்துரைத்து முடிவு குறித்து ஐந்து மணிக்கு தெரிவிப்பதாக கூறியுள்ளனர் என தெரிவித்துள்ளார்.