“சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா?” – கமல் கேள்வி!
சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? என தமிழக அரசுக்கு மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல் கேள்வியெழுப்பியுள்ளார்.
காந்தி ஜெயந்தியையொட்டி, அனைத்து ஊராட்சிகளிழும் கிராம சபை கூட்டம் நடைபெறும். ஆனால் தற்போது கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து வரும் காரணத்தினால், பொதுமக்கள் ஒரே இடத்தில் கூடினால் கொரோனா பாதிப்பு ஏற்படலாம் எனக் கருதி, இந்தாண்டு கிராம சபை கூட்டம் நடைபெறாது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன், “கிராம சபைக் கூட்டங்களை ரத்து செய்ய வைத்த நிஜக் காரணம் என்ன? எனவும் கொரோனா கால செலவு கணக்கு பற்றி மக்கள் கேள்விகள் கேட்பார்கள் என்ற பயமா? அல்லது மக்கள் நீதி மய்யம் கொண்டுவிடும் என்ற நடுக்கமா? சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்று விடுமா? நாளை எமதே” என தனது ட்விட்டர் பக்கத்தில் தமிழக அரசை விமர்சித்துள்ளார்.