வெட்டுக்கிளிகள் படை தமிழகம் வருமா.? அப்படி வந்தால் என்ன செய்வது? – வேளாண்துறை விளக்கம்.!
வெட்டுக்கிளிகள் படை தமிழகம் வருவதற்கான வாய்ப்புகள் குறைவு – தமிழக வேளாண்துறை அறிவிப்பு.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பால் எல்லாரும் அதிர்ந்து போயிருக்கும் நிலையில், அடுத்தடுத்து வரும் எல்லாமே சோதனைக் காலமாக இருக்கிறது. வடமாநிலத்தில் விவசாய நிலங்களை திடீரென வெட்டுக்கிளிகள் ஆக்ரமித்துள்ளது. வெட்டுக்கிளிகள் வயல்களுக்குள் புகுந்து பயிற்களை சேதம் செய்து விடும் தன்மையுள்ளது. ஒரு நாளைக்கு சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவு வரை பறக்கும் தன்மை கொண்டவை. இதனால் வடமாநில விவசாயிகள் பெரும் கவலை கொண்டுள்ளனர். இதனிடையே, தமிழ்நாட்டிலும் வெட்டுக்கிளிகள் படை வந்து பாதிப்பை ஏற்படுத்துமோ என அச்சம் நிலவி வருகிறது.
இந்த நிலையில், வெட்டுக்கிளி படையடைப்பு தக்காண பீட பூமியை தாண்டி தமிழகத்திற்கு வர வாய்ப்பு மிக மிக குறைவு என தமிழக வேளாண்துறை விளக்கம் அளித்துள்ளது. மேலும், ராஜஸ்தான், உத்தரபிரதேசத்தை அச்சுறுத்தும் வெட்டுக்கிளி படையெடுப்பு பற்றி வேளாண்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. அப்படி, வெட்டுக்கிளிகள் தாக்குதல் ஏற்பட்டால் கட்டுப்படுத்தும் முறைகள் குறித்தும் வேளாண்துறை அறிவிறுத்தல் செய்துள்ளது. விளைப்பயிர் பாதுகாப்புகளை வேம்பு சார்ந்த பூச்சிக் கொல்லி மருந்துகளை பயன்படுத்தலாம் என்று கூறியுள்ளது. மேலும், அரசு அனுமதியுடன் பூச்சி மருந்தை வான்வெளி தெளிப்பு மூலம் தெளித்து கட்டுப்படுத்தலாம் என்று அறிவியுறுத்துள்ளது.
வெட்டுக்கிளி படையெடுப்பு தமிழகம் வர வாய்ப்பு குறைவு.!
வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகளையும் வேளாண்மைத்துறை வெளியிட்டுள்ளது.#Locustsattack #LocustSwarmsAttack pic.twitter.com/M0X3PEtUfm
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) May 27, 2020