ஆவின் பால் பச்சை பாக்கெட் தட்டுப்பாடா..? – அமைச்சர் நாசர் விளக்கம்
தமிழ்நாடு முழுவதும் மக்களின் தேவைக்கேற்ப பால் விநியோகிக்கப்படுகிறது என அமைச்சர் நாசர் பேட்டி.
பால்வளத்துறை அமைச்சர் நாசர் அவர்கள் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், சாதாரண மக்கள் பயன்படுத்தக்கூடிய பால் விலை அதிகரிக்கவில்லை.
தமிழ்நாடு முழுவதும் மக்களின் தேவைக்கேற்ப பால் விநியோகிக்கப்படுகிறது. ஒரு நாளைக்கு 65 லட்சம் பால் பாக்கெட்டுகள் தமிழ்நாடு முழுவதும் உற்பத்தி செய்கிறோம். திருவிழாக்களின் போது அதிகமான பால் பாக்கெட்டுகள் விற்பனையாகும். அந்த சமயங்களில் அதிகமான பால் பாக்கெட்டுகள் உற்பத்தி செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.