நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல எனவும்,மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 5-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.இந்நிலையில்,மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுதொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல.நீட் விவகாரத்தில் பழனிசாமி அரசு நடத்திய நாடகத்திற்கு கொஞ்சமும் சளைக்காத வகையில், ‘ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம்’ என்று மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா?”,என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…
சென்னை : முன்னாள் பாலிவுட் நடிகையும், டிவி ரியாலிட்டி ஷோ 'பிக் பாஸ்' இன் மூலம் பிரபலமான சனா கான்…
பெர்த் : பார்டர்-கவாஸ்கர் கோப்பை தொடரின் முதல் போட்டி இன்று பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ்…