“மக்களை ஏமாற்றிய திமுக…இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா?” – டிடிவி தினகரன் கேள்வி!

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல எனவும்,மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? என்றும் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் முன்னதாக நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு மசோதாவை தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழக அரசுக்கு திருப்பி அனுப்பினார். இதைத்தொடர்ந்து, நீட் விலக்கு சட்ட முன்வடிவை ஆளுநர் திருப்பி அனுப்பியுள்ள நிலையில், அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க சட்டமன்ற அனைத்து கட்சி தலைவர்கள் கூட்டம் வரும் 5-ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால்,அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்திருந்தார்.இந்நிலையில்,மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா? என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், இதுதொடர்பாக,தனது ட்விட்டர் பக்கத்தில் அவர் கூறியிருப்பதாவது:
“நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவதற்காக தமிழ்நாடு சட்டப்பேரவை நிறைவேற்றிய மசோதாவை ஆளுநர் திருப்பி அனுப்பியது ஏற்புடையதல்ல.நீட் விவகாரத்தில் பழனிசாமி அரசு நடத்திய நாடகத்திற்கு கொஞ்சமும் சளைக்காத வகையில், ‘ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம்’ என்று மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா?”,என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
நீட் விவகாரத்தில் பழனிசாமி அரசு நடத்திய நாடகத்திற்கு கொஞ்சமும் சளைக்காத வகையில், ‘ஒரே கையெழுத்தில் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம்’ என்று மக்களை ஏமாற்றிய தி.மு.க. இனியாவது ஆக்கப்பூர்வமாக செயல்படுமா?
— TTV Dhinakaran (@TTVDhinakaran) February 4, 2022
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025
நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!
April 17, 2025
உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!
April 17, 2025
கோவையில் தவெக பூத் கமிட்டி மாநாடு.! எப்போது தெரியுமா?
April 17, 2025