ஊரடங்கு நீடிப்பா….? முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை…!
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 11 மணியளவில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார்.
தமிழகம் முழுவதும் கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமாக பரவி வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி கடந்த 10-ஆம் தேதி முதல் 24-ம் தேதி வரை தாளர்வுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்தது. மக்கள் இந்த தளர்வுகளை பயன்படுத்தி அலட்சியமாக செயல்படுவதாக கூறி, 24-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை தளர்வுகளற்ற முழு ஊரடங்கை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்.
இதுகுறித்து அவர் கூறுகையில், தமிழகத்துக்கு தேவைப்பட்டால் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இன்று காலை 11 மணியளவில் முழு ஊரடங்கு மேலும் நீட்டிப்பு, கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை மேற்கொள்ளவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில், மருத்துவம், வருவாய் துறை, பொதுத்துறை மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.