மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஊரடங்கு நீடிப்பா? – அமைச்சர் மா.சுப்பிரமணியன்

Default Image

அபராதம் விதித்துதான் உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ள வேண்டாம் என்று அமைச்சர் அறிவுறுத்தல்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழ்நாட்டில் கொரோனா தொற்றின் வேகம் அதிகரித்துக் கொண்டு இருப்பதால் மக்கள் விதிமுறைகளை முறையாக பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் கடந்த ஒரு வாரங்களில் நாள்தோறும் தொற்றின் எண்ணிக்கை 2 ஆயிரமாக உயர்ந்துகொண்டே வருகிறது.

நேற்று 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்ட நிலையில், இன்றும் பரிசோதனைகள் அடிப்படையில் மேலும் 2,000 அதிகரிக்க கூடும் என்றும் தெரிவித்தார். எனவே தொற்றின் வேகம் அதிகரித்து வருவதால், கொரோனா விதிமுறைகளை கண்டிப்பாக மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்பது அவசியமான ஒன்று. சென்னையில் போதுமான படுக்கை வசதிகள் இருப்பதால் மக்கள் கவலை கொள்ள தேவையில்லை.

அதோல் 100% தடுப்பூசி போடும் இலக்கை நோக்கி அனைவரும் பயணிக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். முன்களப்பணியாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்ட இணை நோயுள்ளவர்கள் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துக்கொள்ளலாம் என்றும் தெரிவித்தார்.

தமிழகத்தில் பூஸ்டர் தடுப்பூசி செலுத்துக்கொள்ள 4 லட்சம் பேர் தகுதியானவர்கள் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார். மேலும், தமிழகத்தில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி முதலமைச்சர் முடிவெடுப்பார் என்றும் பொருளாதார பாதிப்பும், மக்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுப்பதில் முதல்வர் உறுதியாக உள்ளார்.

மேலும், விதிமீறலில் தொடர்ந்து ஈடுபட்டால் அபராதம் என்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. அபராதம் விதித்துதான் உடல்நலனை பாதுகாக்க வேண்டும் என்ற நிலைக்கு தள்ள வேண்டாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்