தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனை என டிடிவி தினகரன் ட்வீட்.
சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சி குறித்து டிடிவி தினகரன் ட்வீட் செய்துள்ளார்.
அந்த ட்விட்டர் பதிவில், ‘சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் அருகே கஞ்சா போதையில் இளைஞர்கள் கடைகளை அடித்து நொறுக்கி அட்டகாசத்தில் ஈடுபட்ட சிசிடிவி காட்சிகளைப் பார்க்கும்போது பெரும் அதிர்ச்சி ஏற்படுகிறது.
தமிழகம் முழுவதும் தங்கு தடையின்றி கொடிகட்டிப் பறக்கும் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருள்களின் விற்பனை, இளைஞர்களை எந்த அளவிற்கு சீரழிக்கிறது என்பதற்கு இக்காட்சிகளே உதாரணம். வெறும் பேச்சளவில் மட்டுமின்றி போதைப் பொருள் ஒழிப்பை உண்மையான அக்கறையோடு காவல்துறை செயல்படுத்த வேண்டும்.
அப்படி செய்தால்தான் தமிழ்நாட்டு இளைஞர்களையும், மாணவர்களையும் இந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்ற முடியும். காவல்துறை பொறுப்பு வகிக்கும் முதலமைச்சர் கவனிப்பாரா?’ என பதிவிட்டுள்ளார்.
மெல்போர்ன் : ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கான…
சென்னை : சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் இரவு ஒரு மாணவி 2 பேரால்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. சென்னையில்…
சென்னை : இன்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு அவர்களுக்கு நூற்றாண்டு பிறந்தநாள் விழா நிகழ்வு சென்னையில்…
மெல்போர்ன் : ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி, ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட…
சென்னை : சென்னை கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் நேற்று ஞானசேகரன் என்பவர்…